உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கையில் ஆண் சடலம் மீட்பு

செங்கையில் ஆண் சடலம் மீட்பு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலையோரம் வடமாநில முதியவர் சடலம் கிடப்பதாக, செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், முதியவர் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வந்தனர்.விசாரணையில், சண்டிகரைச் சேர்ந்த பீமாராவ், 65, என்பதும், விக்கிரவாண்டி பகுதியில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தது தெரியவந்தது.நேற்று முன்தினம் இரவு சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக, பேருந்தில் பயணம் செய்தார். திடீரென செங்கல்பட்டில் இறங்கியுள்ளார். அப்போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி