மேலும் செய்திகள்
வையாவூர் சமூக நலக்கூடத்தை சீரமைக்க கோரிக்கை
28-Dec-2025
உதவி பேராசிரியர் தேர்வில் 128 பேர் ஆப்சென்ட்
28-Dec-2025
இன்று இனிதாக ... (28.12.2025) செங்கல்பட்டு
28-Dec-2025
வடமாநில தொழிலாளி லாரி மோதி பலி
28-Dec-2025
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தின், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் நான்காவது பேரவை கூட்டம், மாவட்ட தலைவர் பால் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது.இந்த கூட்டத்தில், மாநில துணைத் தலைவர் நடராஜன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பேசினர்.இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை, தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.குடும்ப பாதுகாப்பு நிதியை, மூன்று லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஊராட்சி செயலர் மற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு, குறைந்தபட்ச ஓய்வூதியமாக, 7,850 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த தீர்மானங்கள் அனைத்தும், அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
28-Dec-2025
28-Dec-2025
28-Dec-2025
28-Dec-2025