உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பள்ளி மாணவர் விடுதிக்கு வார்டன் நியமிக்க கோரிக்கை

பள்ளி மாணவர் விடுதிக்கு வார்டன் நியமிக்க கோரிக்கை

திருப்போரூர்:திருப்போரூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சிறுதாவூர், ஆமூர், பையனுார் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.மாணவர்களின் நலனுக்காக, அப்பள்ளி அருகே, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், அரசு மாணவர் விடுதி உள்ளது. இதில், 50 மாணவர்கள் தங்கி படிக்கும் அளவிற்கு இட வசதி உள்ளது.இந்த கல்வியாண்டில், தற்போது 18 மாணவர்கள் படிக்கின்றனர். மேலும், மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.இந்த விடுதிக்கு தனி வார்டன் நியமிக்கப்படவில்லை. அதனால், தற்போது தையூர் விடுதி பெண் வார்டன் ஒருவர், இந்த விடுதியையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.அதேபோல, விடுதியில் காவலாளியும் நியமிக்கப்படவில்லை. வனப்பகுதியை ஒட்டி விடுதி அமைந்துள்ளதால்,மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது.எனவே, மாணவர் களின் கல்வி, பாதுகாப்பு நலன் கருதி, இந்த கல்வியாண்டிலாவது, திருப் போரூர் விடுதிக்கு தனி வார்டன், காவலாளி நியமிக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்