உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கொசு மருந்து அடிக்க கோரிக்கை

கொசு மருந்து அடிக்க கோரிக்கை

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குப்பை குவிந்தும், கழிவுநீர் தேங்கியும் துர்நாற்றம் வீசி வருகிறது.குறிப்பாக பிரியா நகர், அம்பிகா நகர், ராஜிவ் காந்தி நகர், காரணை புதுச்சேரி பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் குப்பை குவிந்தும், போதிய பராமரிப்பு இல்லாததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.இதனால், வெயில் காலத்திலும் கொசுக்கள் அதிகமாக உள்ளது. மேலும், தொற்று நோய் பரவும் அபாயத்தில் உள்ளது.எனவே, ஊராட்சி நிர்வாகம் தேங்கியுள்ள கழிவுநீர் கால்வாயை சீரமைத்து, சாலையில் தேங்கியுள்ள குப்பையை அகற்றி, கொசு மருந்து அடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்


 பட்டம்

17 hour(s) ago  




புதிய வீடியோ