உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கடப்பாக்கம் கிளை நுாலகத்திற்கு புது கட்டடம் கட்ட கோரிக்கை

கடப்பாக்கம் கிளை நுாலகத்திற்கு புது கட்டடம் கட்ட கோரிக்கை

செய்யூர்:செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கத்தில், பேரூராட்சி அலுவலகம் அருகே, மாவட்ட கிளை நுாலகம் செயல்பட்டு வருகிறது.கடந்த 1967ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நுாலகத்தை கடப்பாக்கம், ஆலம்பரைக்குப்பம், சேம்புலிபுரம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பட்டதாரிகள், முதியவர்கள் மற்றும் அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருவோர் பயன்படுத்தி வருகின்றனர்.கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் இந்த நுாலக கட்டடம் கட்டப்பட்டதால், பராமரிப்பின்றி பழுதடைந்து உள்ளது.எனவே, பொது நுாலகத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, 50 ஆண்டு பழமையான கட்டடத்தை அகற்றி, புதிய விரிவுபடுத்தப்பட்ட கட்டடம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இந்த நுாலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்க வேண்டும். சங்க இலக்கியமான பத்துப்பாட்டு நுால்களில் ஒன்றான சிறுபாணாற்றுப்படை நுாலை இயற்றிய இடைக்கழிநாடு பகுதியைச் சேர்ந்த புலவர் நல்லுார் நத்தத்தனார் மற்றும் இடைக்கழிநாடு பகுதியில் வாழ்ந்த பதிணென் சித்தர்களில் ஒருவரான இடைக்காட்டு சித்தர் ஆகியோரின் நுால்களை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சமூக ஆர்வலர்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !