உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அங்கன்வாடி அருகே அபாய கிணறு இரும்பு வலை அமைக்க கோரிக்கை

அங்கன்வாடி அருகே அபாய கிணறு இரும்பு வலை அமைக்க கோரிக்கை

மறைமலைநகர்:மறைமலைநகர் நகராட்சி 1வது வார்டு கோனாதி கிராமத்தில், நியாய விலைக்கடையின் அருகில் அங்கன்வாடி மையம் உள்ளது.இதில், 20 குழந்தைகள் ஆரம்ப கல்வி பயில்கின்றனர்.கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக, அங்கன்வாடி மையம் நுழைவு வாயில் பகுதியில் அமைக்கப்பட்ட கிணறு, தற்போது கைவிடப்பட்டு பாழடைந்து உள்ளது.இதனால், அங்கன்வாடி சிறுவர்கள் கிணற்றில் விழுந்து விடாமல் இருக்க, இரும்பு கம்பி வலை அமைத்து, கிணற்றை சுற்றி பாதுகாப்பு தடுப்பு அமைக்கப்பட்டது.தற்போது, மேல் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பி வேலி துருப்பிடித்து உடைந்துள்ளது.தற்போது நுழைவு வாயிலில் விளையாடும் குழந்தைகள், கிணற்றை எட்டிப் பார்க்கும் போது, தவறி விழும் வாய்ப்பு உள்ளது.எனவே, இந்த கிணற்றை சுற்றி மீண்டும் இரும்பு தடுப்பு வேலி அமைத்து, கிணற்றை சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ