உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இடையூறாக கான்கிரீட் கழிவுகள் அகற்றி சமன்படுத்த கோரிக்கை

இடையூறாக கான்கிரீட் கழிவுகள் அகற்றி சமன்படுத்த கோரிக்கை

மதுராந்தகம், மதுராந்தகத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச் சாலையில், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைந்து உள்ளது.அங்கு, நாள்தோறும் மதுராந்தகம் மற்றும் செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் மனு அளிக்க வருகின்றனர்.அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர், பொதுமக்கள் ஒரு சில நாட்களில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகம் எதிரே ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.அவ்வாறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் போது, அவர்கள் கொண்டுவரும் இருசக்கர வாகனங்கள், வேன் உள்ளிட்ட வாகனங்களை புறவழிச் சாலையில், சாலையை ஆக்கிரமித்து நிறுத்திவிட்டு செல்கின்றனர். அதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாக மதில் சுவர் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைப்பதற்காக உடைத்து எடுக்கப்பட்ட, சிமென்ட் கான்கிரீட் கழிவுகள் கொட்டி வைத்துள்ளனர். இந்த இடத்தை சமன்படுத்தி, சீரமைக்க வேண்டும்.அவ்வாறு செய்தால், பொதுமக்கள் கொண்டுவரும் வாகனங்களை, அப்பகுதியில் நிறுத்தி வைக்க முடியும்.எனவே, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், இந்த இடத்தை சமன்படுத்தி சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை