உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கயப்பாக்கம் பள்ளி வளாகத்தில் புதரை அகற்ற வேண்டுகோள்

கயப்பாக்கம் பள்ளி வளாகத்தில் புதரை அகற்ற வேண்டுகோள்

சித்தாமூர்:சித்தாமூர் அருகே கயப்பாக்கம் கிராமத்தில், அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது. இங்கு, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 30க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.மாணவர்களின் பாதுகாப்புக்காக, சில மாதங்களுக்கு முன் பள்ளியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.பள்ளியின் பழையகட்டடம் இடிக்கப்பட்டு, கட்டடக் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. மேலும் பள்ளி வளாகத்தில் பராமரிப்பு இன்றி புதர் மண்டி உள்ளதால், விஷப்பூச்சி களின் வாழ்விடமாக மாற அதிக வாய்ப்பு உள்ளது.ஆகையால். துறை சார்ந்த அதிகாரிகள் பள்ளி மாணவர்களின் நலன் கருதி, பள்ளி வளாகத்தில் உள்ள கட்டடக் கழிவுகள் மற்றும் புதரை அகற்றநடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைஎழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்