உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சமுதாய கூடம் பாழ் சீரமைக்க கோரிக்கை

சமுதாய கூடம் பாழ் சீரமைக்க கோரிக்கை

கடலுார் : கூவத்துார் அருகில் உள்ள கடலுார் ஊராட்சி, பெரியகுப்பம் மீனவர் பகுதியில் சமுதாயக்கூடம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், சுனாமி தாக்குதல் பாதிப்பை தொடர்ந்து, ராஜஸ்தான் மாநில அரசு, இக்கூடத்தை நன்கொடையாக அமைத்தது.துவக்கத்தில், இங்குள்ள மீனவர்கள் விழாக்கள், சுப நிகழ்ச்சிகளை நடத்தினர். பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால், கட்டடத்தில் சுவர் விரிசல் அடைந்து, கதவுகள் மற்றும் ஜன்னல்கள் உடைந்து பொலிவு இழந்து காணப்படுகிறது.எனவே, ஊராட்சி நிர்வாகம், சேதமடைந்த சமுதாய கூட கட்டடத்தை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை