உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரேஷன் கடைக்கு மேற்கூரை பந்தல் அமைக்க கோரிக்கை

ரேஷன் கடைக்கு மேற்கூரை பந்தல் அமைக்க கோரிக்கை

திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த கரும்பாக்கத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இக்கடைக்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயனடைந்து வருகின்றனர். இங்கு, மேற்கூரை பந்தல் அமைக்காததால், பொருட்கள் வாங்க வரும் பகுதிவாசிகள் மழைக்காலங்களிலும், வெயில் காலங்களிலும் அவதிப்பட்டு வருகின்றனர். கர்ப்பிணியர், முதியோர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, கரும்பாக்கம் ரேஷன் கடையில், மேற்கூரை பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி