உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரூ.31 லட்சம் மோசடி இருவருக்கு காப்பு

ரூ.31 லட்சம் மோசடி இருவருக்கு காப்பு

சென்னை:சென்னை, கொளத்துார், சிவானந்தா நகரைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத், 39. தனியார் வங்கியில் கிளை மேலாளர்.இவர், கடந்த 2020ல், சொந்தமாக வாங்குவதற்கு நிலம் தேடிய போது, கொளத்துாரைச் சேர்ந்த நிலத்தரகர் பிரகாஷ் மற்றும் புழல் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர். அதன்படி, அம்பத்துார் அடுத்த கள்ளிக்குப்பம், நேதாஜி நகரிலுள்ள, 2,450 சதுர அடி நிலத்தில், 1,200 சதுர அடி நிலத்தை மட்டும், ஹரிபிரசாத் பெயரில் இருவரும் கிரையம் செய்து கொடுத்துள்ளனர்.இந்நிலையில் ஓராண்டிற்குப் பின், சார்-பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட கடிதம் குறித்து விசாரித்த போது, பிரகாஷ் மற்றும் லோகநாதன் இருவரும், போலி ஆவணங்கள் தயாரித்து, 31 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றியது தெரிந்தது.இது குறித்து விசாரித்த நம்பிக்கை மோசடி தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் வள்ளி, தலைமறைவாக இருந்த பிரகாஷ் மற்றும் லோகநாதன் இருவரையும், நேற்று கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை