உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி பணி செய்யும் துாய்மை பணியாளர்கள்

பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி பணி செய்யும் துாய்மை பணியாளர்கள்

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி, 21 வார்டுகள் உடையது. இங்கு, 20,000த்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 500க்கும் மேற்பட்ட வணிக கட்டடங்கள், 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.இங்கு சேகரிக்கப்படும் குப்பை, அடிகளார் சாலை, மட்டன ஓடை, கூடலுார் உள்ளிட்ட பகுதிகளில் தரம் பிரிக்கப்பட்டு, மட்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.நகராட்சி முழுதும் குப்பையை அள்ள, தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்து, ஒப்பந்த முறையில் நுாற்றுக்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், நேற்று ஜி.எஸ்.டி., சாலை அருகில் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்ட துாய்மை பணியாளர்கள், முகக்கவசம், கையுறை உள்ளிட்ட எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டனர்.பல நாட்களாக பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி துாய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்