உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா

ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா

திருப்போரூர்:திருப்போரூரில் , தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், பணி நிறைவு பெற்றவர்கள், நல்லாசிரியர் விருது பெற்றவர்கள் மற்றும் மகளிர் தினம் ஆகிய முப்பெரும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு வட்டார தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். வட்டார செயலர் மதிச்செல்வன் முன்னிலை வகித்தார். வட்டார செயலரும், மாவட்ட செயலருமான ஜோசப் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் இணை பொது செயலரும், உலக தமிழாசிரியர் பேரவையின் பொது செயலருமான ரெங்கராஜன் பங்கேற்று பேசினார்.தொடர்ந்து, பணி நிறைவு பெற்ற எட்டு ஆசிரியர், ஆசிரியையர், நல்லாசிரியர் விருது பெற்ற குண்ணப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பிரபுதாஸ் ஆகியோரை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி