உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காரை வழிமறித்து தாக்குதல் செங்கையில் வாலிபர்கள் கைது

காரை வழிமறித்து தாக்குதல் செங்கையில் வாலிபர்கள் கைது

செங்கல்பட்டு : துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்தவர் பார்த்தசாரதி, 32. இவர், நேற்று முன்தினம், சென்னை சூளைமேட்டில் பெண் பார்த்து விட்டு, காரில் உறவினர்களுடன் மீண்டும் கோவில்பட்டிக்கு சென்று கொண்டு இருந்தார்.திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையில், கரும்பாக்கம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, முன்னே இருசக்கர வாகனத்தில் சென்ற திருப்போரூர் பகுதியை சேர்ந்த காமேஷ்வரன், 24, அவரது நண்பர் ராகுல், 24, இருவரும், தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.இதைக் கண்ட பார்த்தசாரதி, காரை நிறுத்தி பார்த்து விட்டு, மீண்டும் செங்கல்பட்டு நோக்கி சென்றார். இதை கண்ட இளைஞர்கள், கார் தங்கள் மீது மோதி விட்டு நிற்காமல் செல்வதாக நினைத்து, முள்ளிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆகாஷ், 24, மற்றும்நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.பார்த்தசாரதியின் காரை நண்பர்களுடன் துரத்தி சென்ற ஆகாஷ், ரெட்டிக்குப்பம் பகுதியில் மடக்கி, கார் கண்ணாடியை உடைத்து, காரில் இருந்த பார்த்தசாரதி மற்றும் அவரது, உறவினர்களை தாக்கிஉள்ளார்.மேலும், காரில் இருந்த 45,000 ரூபாய் பணம் மற்றும் 3 சவரன் தங்கச்செயினை பறித்துச்சென்றனர்.இது குறித்து, பார்த்தசாரதி செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார், சந்திரன், சிவக்குமார், ஆகாஷ், சங்கர் உள்ளிட்டோரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ