உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மரத்திலிருந்து விழுந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மரத்திலிருந்து விழுந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த இருசாமநல்லுார் பகுதியைச் சேர்ந்த வேளாங்கண்ணி மகன் ஜெயப்பிரகாஷ், 16, இவர், மதுராந்தகத்தில் உள்ள இந்து மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில், கடந்த 5ம் தேதி, இருசாமநல்லுார் பகுதியில் உள்ள பனை மரத்தில் ஏறி, பனங்காய் பறிக்க முயன்றுள்ளார்.அப்போது, எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த அவரை, பெற்றோர் மீட்டு, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில், முதல் உதவி சிகிச்சைக்கு சேர்த்தனர்.பின், மேல் சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி, சிறுவன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.மருத்துவமனையில் இருந்து வரப்பெற்ற தகவலின்படி வழக்கு பதிவு செய்த மதுராந்தகம் போலீசார், மேலும் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்