உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குறைந்தழுத்த மின்சாரம் காயார் மக்கள் கொதிப்பு

குறைந்தழுத்த மின்சாரம் காயார் மக்கள் கொதிப்பு

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், காயார் ஊராட்சியில், மேட்டுத்தெரு, பள்ளத்தெருக்கள் உள்ளன. இங்கு, 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இந்நிலையில், இந்த கிராமத்தில் குறைந்த மின் அழுத்த பிரச்னையால், அப்பகுதி குடியிருப்புவாசிகள், விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:பல ஆண்டுகளுக்கு மேலாக, குறைந்த மின் அழுத்த பிரச்னை உள்ளது. இதனால், கோடை காலத்தில் மின் விசிறி, மின் மோட்டார், தொலைக்காட்சி போன்ற மின் சாதன பொருட்களை இயக்க முடிவதில்லை.மின் விசிறிகள் கூட இயங்காததால், இரவு நேரத்தில் வீட்டின் வெளியே துாங்கும் நிலை ஏற்படுகிறது. மின் சாதன பொருட்களும் அடிக்கடி பழுது ஏற்படுகின்றன.மின் அழுத்த பிரச்னையை சரி செய்ய, புதிய மின் மாற்றி அமைக்க வேண்டும் என, மாம்பாக்கத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் கோரிக்கை வைத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.மேலும், விவசாயப் பணி சார்ந்து, 30 பம்ப்செட் உள்ளது. குறைந்த மின் அழுத்தத்தால், சாகுபடிக்கு தண்ணீர் பாய்ச்சும் பணியும் பாதிக்கப்படுகிறது.இதே நிலை நீடித்தால், எங்கள் கிராம மக்கள் இணைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை