உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மக்களுடன் முதல்வர் திட்டம் ரூ.20 லட்சத்தில் நலத்திட்டம்

மக்களுடன் முதல்வர் திட்டம் ரூ.20 லட்சத்தில் நலத்திட்டம்

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் ஊராட்சியில், நேற்று ஊரக பகுதிகளுக்கான, 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் துவக்கப்பட்டது.இதில், செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் தலைமை வகித்தார். குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார்.இதில், வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட 15 அரசு துறைகள் சார்பில், 44 சேவைகள் சார்ந்த முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் 150க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.இந்த முகாமில் பட்டா, குடும்ப அட்டை, தையல் இயந்திரம், உடற்பயிற்ச்சி கூடத்திற்கான கடனுதவி என, 47 பயனாளிகளுக்கு 20.12 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.திருப்போரூர் எம்.எல்.ஏ. பாலாஜி, ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், ஊராட்சி தலைவர் ராணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி