உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உணவக மாடியிலிருந்து கீழே விழுந்தவர் பலி

உணவக மாடியிலிருந்து கீழே விழுந்தவர் பலி

மாமல்லபுரம்:கூவத்துார் அடுத்த சீக்கினாங்குப்பத்தைச் சேர்ந்தவர் கங்காதுரை என்கிற சஞ்சய், 23. மாமல்லபுரம், கிழக்கு ராஜ வீதியில் உள்ள உணவகத்தில், நான்கு ஆண்டுகளாக ஊழியராக பணியாற்றினார்.நேற்று நள்ளிரவு 1:00 மணிக்கு, உணவக ஊழியர்கள் தங்கியுள்ள மூன்றாம் தள மாடியிலிருந்து தவறி, கீழே விழுந்தார்.உணவகத்தினர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி, நேற்று பகல் 1:10 மணிக்கு இறந்தார்.இதுகுறித்து, அவரது அண்ணன் அன்பழகன் அளித்த புகாரின்படி, மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி