உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை கழிவு நீர் தொட்டிக்கு தெர்மாகோல் மூடி அமைப்பு

செங்கை கழிவு நீர் தொட்டிக்கு தெர்மாகோல் மூடி அமைப்பு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சி மலைப் பூங்கா மேட்டு தெருவில், சிங்காரவேலர் மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு, செங்கல்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தோர், மீன்கள் வாங்க வந்து செல்கின்றனர்.இந்த மார்க்கெட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர், அருகில் உள்ள கழிவு நீர் தொட்டிக்கு செல்கிறது. இந்த கழிவு நீர் தொட்டி மூடி, கடந்த சில மாதங்களுக்கு முன் உடைந்து காணப்பட்டது.இதன் காரணமாக, அந்த வழியாக செல்லும் பள்ளி குழந்தைகள் மற்றும் பொது மக்கள், கழிவு நீர் தொட்டியில் விழுந்து பாதிக்கப்படும் அபாயம் இருந்து வந்தது.இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், மீன் எடுத்துச் செல்லும் பெட்டியில் வரும் தெர்மாகோலை, கழிவு நீர் தொட்டியில் மீது மூடி வைத்துள்ளனர்.மேலும், அந்த மூடி காற்றில் பறக்காமல் இருக்க, அதன்மீது கற்கள் வைக்கப்பட்டு உள்ளது. எனவே, ஆபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த கழிவு நீர் தொட்டியை முறையாக மூட, நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ