உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / போதை மாத்திரை விற்ற மூவர் கைது

போதை மாத்திரை விற்ற மூவர் கைது

தாம்பரம்:தாம்பரத்தில் நேற்று, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகிக்கும் வகையில் திரிந்த மூவரை பிடித்து விசாரித்தனர்.மேற்கு தாம்பரம், கஸ்துாரிபாய் நகரைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற தீனா, 23, திருவள்ளுவர் தெரு திவாகர், 20, பழைய ஸ்டேட் பேங்க் காலனி, மணியரசன் என்ற மண்ட விஷ்ணு, 24, ஆகிய மூன்று பேரிடம், 300க்கும் மேற்பட்ட நிவாரணி மாத்திரைகள் இருந்தன.மூன்று பேரையும் கைது செய்த போலீசார், 1 லட்சம் ரூபாய் மதிப்புடைய மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்