உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புகையிலை விழிப்புணர்வு பேரணி

புகையிலை விழிப்புணர்வு பேரணி

திருப்போரூர், : புகையிலையின் தீமைகளை வலியுறுத்தும் வகையில், மாநிலம் முழுதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழக அரசும், புகையிலை விழிப்புணர்வு முகாமை நடத்த அறிவுறுத்தி உள்ளது.திருப்போரூரில் பிரம்மகுமாரிகள் அமைப்பு சார்பில், உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.இதில், பொதுமக்கள், மாணவர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அதில் புகைபிடிப்பது, புகையிலை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கப்பட்டது.அப்போது, அங்கிருந்த பொதுமக்களும், தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களைக் கேட்டு, விளக்கங்களை கேட்டறிந்தனர்.தொடர்ந்து, திருப்போரூர் பேரூராட்சி அலுவலகம் அருகே தொடங்கிய பேரணி, ஓ.எம்.ஆர்., சாலை வழியாக சென்று தனியார் பள்ளி அருகே முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி