உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டூ - வீலர் மோதி முதியவர் பலி டூ - வீலர் மோதி முதியவர் பலி

டூ - வீலர் மோதி முதியவர் பலி டூ - வீலர் மோதி முதியவர் பலி

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகில்,நேற்று முன்தினம் காலை அடையாளம் தெரியாத முதியவர் சாலையின் குறுக்கே கடந்தார். அப்போது, திருக்கழுக்குன்றத்திலிருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற பல்சர்இருசக்கர வாகனம், அவர் மீது மோதியதில் துாக்கி வீசப்பட்டார்.இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை, திருக்கழுக்குன்றம் போலீசார் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று உயிரிழந்தார்.60 வயது மதிக்கத்தக்க அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி