| ADDED : ஏப் 30, 2024 10:30 PM
மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த பொத்தேரி ஏரிக்கரை பகுதியில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மறைமலை நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த கருப்பு நிற 'ஷிப்ட்' காரை நிறுத்தி, போலீசார் சோதனை செய்தனர்.அப்போது, அதில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த, சிறு சிறு கஞ்சா பொட்டலங்களை போலீசார் கண்டுபிடித்தனர்.காரில் இருந்த இரண்டு நபர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் செங்கல்பட்டு, குண்ணவாக்கம் அடுத்த அமணம்பாக்கம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார், 35, அவரின் நண்பர் விஜய், 33, என்பது தெரிய வந்தது.இவர்கள், சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில், கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்களிடமிருந்த 1.300 கிலோ கஞ்சா மற்றும் அவர்கள் வந்த காரை பறிமுதல் செய்தனர்.