உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வில்லியம்பாக்கம் பாலாற்றில் மணல் திருடிய இருவர் கைது

வில்லியம்பாக்கம் பாலாற்றில் மணல் திருடிய இருவர் கைது

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் பகுதி பாலாற்றில் மணல் கடத்தப்படுவதாக, செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, வில்லியம்பாக்கம் பாலாற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், வில்லியம்பாக்கம் பாலாற்று கரை ஓரம் வந்த டாடா மினி லாரியை மடக்கினர்.போலீசாரை கண்டதும், லாரியில் இருந்த நான்கு பேரில் இருவர் தப்பி ஓடினர். மற்ற இருவரை மடக்கி பிடித்த போலீசார், வாகனத்தை சோதனை செய்த போது, அதில் ஆற்று மணல் இருப்பது தெரிய வந்தது.மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், இருவரும் வில்லியம்பாக்கம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 33, தேவனுார் பகுதியை சேர்ந்த முருகானந்தம், 34, என்பது தெரிந்தது.இருவரையும் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், தப்பியோடிய இருவரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை