உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குடிபோதையில் கிணற்றில் குளித்த இருவர் பலி

குடிபோதையில் கிணற்றில் குளித்த இருவர் பலி

கூடுவாஞ்சேரி,:சென்னை, ஷெனாய் நகர் பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப், 24. இவர், தன் நண்பர்களான அமைந்தகரையை சேர்ந்த கார்த்திக், 30, அஜித், 28, பாலாஜி, 28, வசந்த், 26, பிரகாஷ், 25, வினோத், 33, ஆகியோருடன், கொளப்பாக்கத்தில் உள்ள அவரது நண்பரின் வீட்டில், மது அருந்த சென்றுள்ளார்.மது குடித்துவிட்டு, ஊனமாஞ்சேரி செல்லும் சாலையில், வேம்புலி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில், அனைவரும் குளித்துள்ளனர். அப்போது, நீச்சல் தெரியாத பிரதீப், கிண்ற்றில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற கார்த்திக்கும் நீரில் மூழ்கினார்.பதற்றமடைந்த மற்ற நண்பர்கள், அருகில் இருந்த கிராம மக்களிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள், கிளாம்பாக்கம் போலீசாருக்கும், மறைமலை நகர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கும் தகவல் அளித்தனர்.விரைந்து வந்த மீட்பு படையினர், கிணற்றில் மூழ்கிய பிரதீப் மற்றும் கார்த்திக்கை மீட்டு, வெளியே கொண்டு வந்தனர். ஆனால், அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது.இருவரது உடல்களையும் கைப்பற்றிய கிளாம்பாக்கம் போலீசார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை