உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாலாற்று பாலத்தில் பள்ளம் தடுமாறும் டூ - வீலர் பயணியர்

பாலாற்று பாலத்தில் பள்ளம் தடுமாறும் டூ - வீலர் பயணியர்

புதுப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த வாயலுார் - கடலுார் பாலாற்றுப் படுகையில், நீளமான பாலம் உள்ளது. சென்னை - புதுச்சேரி இடையே செல்லும் வாகனங்கள், கல்பாக்கம் சுற்றுப்புற வாகனங்கள், அதில் கடக்கின்றன.கடந்த 2016ல், 1,076 மீ., நீளம், 19 மீ., அகலம், 7.3 மீ., உயரம் அளவில், 40 கான்கிரீட் துாண்களுடன் கட்டப்பட்டது.இத்தடத்தை சுங்கக் கட்டண சாலையாக நிர்வகித்த தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், பாலத்தை கட்டி, கடந்த எட்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது.தற்போது, தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு, புதிய நான்கு வழிப்பாதை அமைக்கப்படுகிறது. பழைய பாலங்கள் இடிக்கப்பட்டு, புதிதாக கட்டப்படுகின்றன.இப்பாலத்தில், ஆங்காங்கே கான்கிரீட் தளம் பெயர்ந்து, அபாயகரமான பள்ளம், ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளன.இருசக்கர வாகன பயணியர், அந்த பள்ளத்தில் சிக்கி தடுமாறுகின்றனர். தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பாலத்தின் உறுதித்தன்மையை பரிசோதித்து, பலப்படுத்த வேண்டுமென, பயணியர் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ