உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விபரம் அளிக்காத சங்க உறுப்பினர்கள் தேர்தலில் பங்களிக்க வாய்ப்பில்லை செங்கை கூட்டுறவு சரகம் திட்டவட்டம்

விபரம் அளிக்காத சங்க உறுப்பினர்கள் தேர்தலில் பங்களிக்க வாய்ப்பில்லை செங்கை கூட்டுறவு சரகம் திட்டவட்டம்

மாமல்லபுரம், ஜூன் 15-தமிழக கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு பண்டக சாலைகள், பிற சங்கங்கள் இயங்குகின்றன. அவற்றில், ஏராளமானோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

விபரங்கள் அவசியம்

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் 1988ம் ஆண்டு விதிகளில், அரசு திருத்தங்கள் மேற்கொண்டு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் அரசிதழில் வெளியிட்டு, திருத்த விதிகளை நடைமுறைப்படுத்தியது.சங்க தேர்தல் தொடர்பான 52ம் விதி எண்ணில், உட்பிரிவு 7(b)(i) - ன்படி, உறுப்பினர்கள் பட்டியலில், உறுப்பினர் பெயர், உட்பிரிவு இருப்பின் அப்பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், குடும்ப அட்டை, ஆதார் எண், நுழைவு எண், உறுப்பினராக சேர்ந்த நாள், முகவரி ஆகிய விபரங்கள் அவசியம் இடம்பெற வேண்டும்.அதே விதி எண், உட்பிரிவு எண் 7(e)(i) - ன்படி, சங்க வாக்காளர் பட்டியலில், குடும்ப அட்டை மற்றும் ஆதார் எண்கள் ஆகியவை அவசியம் இடம்பெற வேண்டும்.செங்கல்பட்டு சரகத்திற்குட்பட்ட கூட்டுறவு சங்க நிறுவனங்களின் உறுப்பினர்கள், இந்த விபரங்களை, ஆவண நகல்களுடன், கடந்த ஆண்டு அக்.,க்குள் சங்க அலுவலகங்களில், நேரடியாகவோ அல்லது பதிவுத்தபாலிலோ அனுப்புமாறு அறிவிக்கப்பட்டது.விபரங்கள் அளிக்காதவர் பெயர், சங்கத்தின் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது; சங்க தேர்தலில் ஓட்டளிக்கவோ, போட்டியிடவோ இயலாது என தெரிவிக்கப்பட்டது.

மூன்று கூட்டம்

இவ்விபரங்களை உடனே அளிக்குமாறு, இரண்டு முறை வாய்ப்பளித்தும், பெரும்பாலானோர் அளிக்கவில்லை. இதையடுத்து, இறுதி வாய்ப்பாக, வரும் ஜூன் 20ம் தேதிக்குள், குடும்ப அட்டை, ஆதார் எண் விபரங்கள், அதன் நகல்கள் ஆகியவற்றை அளிக்குமாறு, செங்கல்பட்டு கூட்டுறவு சரக நிர்வாகம் அறிவித்துள்ளது.விபரங்களை அளிக்காதவர்கள், தமிழ்நாடு கூட்டுறவு சட்டம், 2(h) - ன்படி, சங்க சேவைகளை குறைந்தபட்ச அளவிலும் பயன்படுத்தாதவர்கள், 2(i) - ன்படி, பொது பேரவை மூன்று கூட்டங்களில் பங்கேற்காதவர்கள், நிர்வாக குழு தேர்தல் உரிமைகள் இன்றி, தகுதியிழப்பு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சங்கங்களின் சிறப்பு பொது பேரவை கூட்டம், வரும் 21ம் தேதி நடத்தப்படுவதாகவும், 'அ' வகுப்பு உறுப்பினர்கள் அதில் பங்கேற்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ