| ADDED : ஜூலை 07, 2024 12:38 AM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பை கொட்டப்பட்டு உள்ளதால், ஹோட்டல்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது.இதனால், ஹோட்டல் உணவு கழிவுகளை உண்பதற்காக, அப்பகுதியில் பன்றிகள் உலா வருகின்றன. இதன் காரணமாக, அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாய நிலை உள்ளது.கால்நடைகள் மற்றும் நாய், பன்றிகள் சாலையை கடப்பதால், தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சில சமயங்களில், இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, தேசிய நெடுஞ்சாலை ஓரம், சிமென்ட் கான்கிரீட் கால்வாய் அமைத்து, கழிவுநீர் விரைந்து வெளியேறும் வகையில் சீரமைக்க, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.