உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செய்யூர் ஊராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா?

செய்யூர் ஊராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா?

செய்யூர், : செய்யூர் ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 10,000த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.செய்யூர், பாளையர்மடம் பகுதியில் உள்ள குளக்கரை மீது உள்ள 'இ - -சேவை' மையத்தில் ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இந்த இ - -சேவை மையத்தில் போதிய இடவசதி இல்லாததால், மன்ற கூட்டங்கள் நடத்தவும், அலுவலக கோப்புகளை பாதுகாக்கவும், சேவைக்காக வருவோர் அமரவும், போதிய இடவசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.பல ஆண்டுகளாக புதிய ஊராட்சி கட்டடம் அமைக்க கோரிக்கை எழுந்து வரும் நிலையில், காலி இடம் இல்லாததால், புதிய ஊராட்சி கட்டடம் அமைப்பதில் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது.எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள பழைய கால்நடை மருத்துவமனை கட்டடத்தை அகற்றி, புதிய ஊராட்சி கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை