உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / எல்லையம்மன் கோவில் வரை இயக்கப்படும் டவுன் பஸ் கடப்பாக்கத்திற்கு நீட்டிக்கப்படுமா?

எல்லையம்மன் கோவில் வரை இயக்கப்படும் டவுன் பஸ் கடப்பாக்கத்திற்கு நீட்டிக்கப்படுமா?

செய்யூர்,:செய்யூர் அடுத்த எல்லையம்மன் கோவிலுக்கு, மதுராந்தகத்தில் இருந்து டி7 தடம் எண் கொண்ட, இரண்டு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து, செய்யூர், சித்தாமூர், முதுகரை வழியாக மதுராந்தகம் செல்கிறது.இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 10,000ரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் இருந்து, தினசரி நுாற்றுக்கணக்கானோர் மற்றும் பள்ளி கல்லுாரி மாணவ - மாணவியர், சித்தாமூர், மேல்மருவத்துார், மதுராந்தகம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர்.இப்பகுதியில் இருந்து செய்யூர் வழியாக, மதுராந்தகத்திற்கு செல்ல நேரடி பேருந்து வசதி இல்லாததால், தனியார் பேருந்து அல்லது ஷேர் ஆட்டோவில் எல்லையம்மன் கோவில் சென்று, அங்கிருந்து மாற்று பேருந்து வாயிலாக செல்லும் நிலை உள்ளது.இதனால், பொதுமக்களுக்கு பணவிரயம் மற்றும் கால விரயமாவதாக குற்றம் சாட்டுகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்களின் நலன் கருதி, தற்போது எல்லையம்மன் கோவில் வரை இயக்கப்படும் அரசு பேருந்தை, காசிபாட்டை சாலை வழியாக, கடப்பாக்கம் மார்க்கெட் வரை இயக்க வேண்டும் அல்லது கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடப்பாக்கம் வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை