மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
3 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
3 hour(s) ago
செங்கல்பட்டு:ஒருங்கிணைந்த நீதிமன்றம் பகுதியில், விபத்துகளை தடுக்க, சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், முதன்மை மாவட்ட நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றம், தலைமை குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட, 13 நீதிமன்றங்கள் உள்ளன.இங்கு, மாவட்டத்தில் இருந்து பல்வேறு வழக்குகள் தொடர்பாக, தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். நீதிமன்றம் அருகில் உள்ள வளைவு பகுதியில், செங்கல்பட்டு -- மதுராந்தகம் சாலையில் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிவேகமாக கடக்கின்றன.அதனால், இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றன. தற்போது வரை நுாற்றுக்கும் மேற்பட்டோர் விபத்துகளில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.இப்பகுதியில், பெரிய அளவில் விபத்துகள் நடப்பதற்குள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சாலையின் இருவழிதடத்திலும் வேகத்தடை அமைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
3 hour(s) ago
3 hour(s) ago