உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கம் பகுதியில், கார் வாட்டர் வாஷ் கடை உள்ளது. இதில், திருநெல்வெலியை சேர்ந்த சகாயராபின், 28, என்பவர் வேலை செய்து வந்தார்.நேற்று மாலை 3:00 மணிக்கு, கார் வாட்டர் வாஷ் செய்வதற்காக, மின் மோட்டார் ஸ்விட்ச்சை ஆன் செய்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.உடனே, கடையில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில் சகாயராபின் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை