உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையில் திரிந்த 28 மாடுகள் பறிமுதல்

சாலையில் திரிந்த 28 மாடுகள் பறிமுதல்

திருப்போரூர்: சாலையில் சுற்றித்திரிந்த 28 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்போரூர் பேரூராட்சி ஓ.எம்.ஆர்., சாலை ரவுண்டானா பகுதி, செங்கல்பட்டு சாலை உள்ளிட்ட இடங்களில் சுற்றித்திரியும் கால்நடைகளால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. சாலை நடுவிலும், குறுக்கிலும் சென்று வரும், மாடுகளால், தடுமாறும் வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். கால்நடைகளை வீடுகளில் கட்டி வளர்க்க வேண்டும். சாலைகளில் கால்நடைகளை திரியவிட்டால், அவற்றின் உரிமையாளர்களுக்கு, அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என, பேரூராட்சி நிர்வாகம் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகிறது. இருப்பினும், கால்நடை வளர்ப்போர் அதை பின்பற்றாமல், அலட்சியமாக உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு, திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் அதிரடியாக களத்தில் இறங்கி ஊழியர்கள், சாலையில் சுற்றித்திரிந்த, 28 மாடுகளை பிடித்தனர். பிடிபட்ட மாடுகள், பராமரிக்கும் மையத்தில் ஒப்படைக்கப்பட்டன. கால்நடை உரிமையாளர்களுக்கு 12,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ