உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / படூர் சாலைகள் சீரமைப்பு ரூ.3.27 கோடி நிதி ஒதுக்கீடு

படூர் சாலைகள் சீரமைப்பு ரூ.3.27 கோடி நிதி ஒதுக்கீடு

திருப்போரூர் : திருப்போரூர் ஒன்றியம், படூர் ஊராட்சி சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியாக வளர்ச்சியடைந்து வருகிறது. இங்கு, அடுக்குமாடி குடியிருப்புகள், கல்லுாரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள் உருவாகியுள்ளன.இப்பகுதியில், பல தெருக்களில் சாலை தேமடைந்துள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.இதையடுத்து, வள்ளளார் தெரு, திருவள்ளுவர் தெரு உள்ளிட்ட 22 தெருக்களில், சிமென்ட் சாலை, பேவர் பிளாக் சாலைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்காக, பல்வேறு அரசு திட்டத்தின் கீழ், 3.27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி