உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தொழுப்பேடு பகுதியில் 4 மின் கம்பங்கள் சாய்ந்தன

தொழுப்பேடு பகுதியில் 4 மின் கம்பங்கள் சாய்ந்தன

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டு தொழுப்பேடு ஊராட்சி உள்ளது. இப்பகுதிக்கு, பெரும்பேர்கண்டிகை துணை மின் நிலையத்திலிருந்து, மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.நேற்று, புயலின் காரணமாக, தொழுப்பேடு - சூணாம்பேடு மாநில நெடுஞ்சாலையில், ஒரே வரிசையில் இருந்த நான்கு மின் கம்பங்கள் உடைந்து சாய்ந்தன.மின் கம்பங்களில் சிமென்ட் பூச்சு உதிர்ந்து, சேதமான நிலையில் இருந்ததால், புயல் காற்றின் வேகத்தில் அவை உடைந்து சாய்ந்தன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி