உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுராந்தகம் ஏரியில் இருந்து 4,400 கன அடி நீர் வெளியேற்றம்

மதுராந்தகம் ஏரியில் இருந்து 4,400 கன அடி நீர் வெளியேற்றம்

மதுராந்தகம் : கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், மதுராந்தகம் ஏரிக்கு, 4,900 கன அடி நீர் வருவதால், ஏரியிலிருந்து 4,400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள மதுராந்தகம் ஏரியின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி, 2,500 ஏக்கர். ஐந்து மதகுகள் வழியாக, 4,000 ஏக்கர் விவசாய நிலங்களும், மேல்மட்ட கால்வாய் வழியாக, 30 ஏரிகளுக்கு நீர் கொண்டு சென்று, அதிலிருந்து 3,000 ஏக்கர் நிலங்கள் என, மொத்தம் 7,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.மதுராந்தகம் ஏரியை துார் வாரி ஆழப்படுத்துதல், கொள்ளளவை உயர்த்துதல் மற்றும் கதவணையுடன் கூடிய உபரி நீர் போக்கி கட்டமைக்கும் பணிகளுக்கு 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில், ஏரியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளுக்கு, கூடுதலாக 43 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.மொத்தம், 160 கோடி ரூபாய் செலவில், மதுராந்தகம் ஏரி சீரமைக்கப்பட்டு வருகிறது.கடந்த சில நாட்களாக, வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், வந்தவாசி மற்றும் உத்திரமேரூர் ஏரிகள் நிரம்பி, கலங்கல் வழியாக வெளியேறும் உபரி நீர், கிளியாறு மற்றும் நெல்வாய் ஆறு ஆகியவற்றிலிருந்து, 4,900 கன அடி நீர், மதுராந்தகம் ஏரிக்கு வருகிறது.இதன் காரணமாக, 4,400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், மதுராந்தகம் கழனி வெளிப்பகுதியின், வடக்கு பகுதியில் வெள்ளக்காடாக உள்ளது. தற்போது, கிளியாற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு நீர் சென்று, கடலில் கலக்கிறது.இதனால், கரையோர பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ