உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  மருத்துவமனை காவலாளியின் விரலை கடித்தவரால் பரபரப்பு

 மருத்துவமனை காவலாளியின் விரலை கடித்தவரால் பரபரப்பு

தாம்பரம்:தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனையில், ஊசி போடும் அறையை தவறாக காட்டியதால், ஆத்திரமடைந்த நபர், காவலாளி விரலை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் சானடோரியத்தில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில், பம்மல், பசும்பொன் நகரை சேர்ந்த அம்பிகாபதி, 56, என்பவர், காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, புறநோயாளி பிரிவில் பணியில் இருந்தார். அப்போது, கிழக்கு தாம்பரம், ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சின்னா, 59, என்பவர், தன் மகளுக்கு ஊசி போடுவதற்காக வந்தார். காவலாளி அம்பிகாபதியிடம் ஊசி போடும் அறை எங்கே உள்ளது என கேட்டார். அப்போது, தவறான அறையை அம்பிகாபதி காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சின்னா, காவலாளியிடம் தகராறில் ஈடுபட்டு, இருவரும் சட்டையை பிடித்து சண்டையிட்டனர். அப்போது, ஆத்திரமடைந்த சின்னா, அம்பிகாபதியின் வலது கையின் நடுவிரலை கடித்தார். வலி தாங்க முடியாமல் அம்பிகாபதி கத்தியதைக் கேட்டு அங்கிருந்தவர்கள், இருவரையும் தடுத்து, சமாதானப்படுத்தி அனுப்பினர். இச்சம்பவம் குறித்து, தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்