உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருமணமான பெண்ணுடன் தங்கியிருந்தவர் தற்கொலை

திருமணமான பெண்ணுடன் தங்கியிருந்தவர் தற்கொலை

சேலையூர்:சேலையூர் அடுத்த வேங்கைவாசல், சாமிநாதபுரம், 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் வசந்த், 37; திருமணமாகவில்லை. வீட்டின் முன்பகுதியில், 'வசந்த் பேக்கர் மூவிஸ்' என்ற பெயரில் கிடங்கு நடத்தி வந்தார். சேலையூர் அடுத்த, காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த திருமணமான, 31 வயது பெண்ணுடன், வசந்த் மூன்று மாதங்களாக தொடர்பில் இருந்துள்ளார்.அந்த பெண், வசந்த் உடன் தங்கியுள்ளார். மார்ச், 11ம் தேதி, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், அந்த பெண் கோபித்துக் கொண்டு, வீட்டை விட்டு சென்று விட்டார். செல்லும் முன், கிடங்கை திறந்து, அங்கிருந்த பொருட்களுக்கு தீ வைத்து சென்றதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், நேற்று காலை, நீண்ட நேரம் ஆகியும் படுக்கை அறையில் இருந்து வசந்த் வெளியே வரவில்லை.சந்தேகமடைந்த குடும்பத்தினர், அறையின் கதவை உடைத்து பார்த்தபோது, அவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து, சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்