பரனுாரில் விபத்து போக்குவரத்து நெரிசல்
மறைமலை நகர்:அரசு பேருந்தில் தொழிற்சாலை பேருந்து மோதியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.கோவையில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பேருந்து நேற்று காலை பரனுார் ஜி.எஸ்.டி., சாலையில் வந்து கொண்டிருந்தது. ரயில்வே மேம்பாலம் அருகில் வந்த போது அரசு பேருந்து டிரைவர் திடீரென பிரேக் பிடித்த போது, பின்னால் வந்த மகேந்திரா சிட்டி தனியார் தொழிற்சாலை பேருந்து அரசு பேருந்தில் மோதியது. இதில் தொழிற்சாலை பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து, பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு சிறு காயம் ஏற்பட்டது. அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து காரணமாக ஜி. எஸ்.டி., சாலையில் நீண்ட துாரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.