மேலும் செய்திகள்
கம்மாளம்பூண்டியில் சாலை விரிவாக்க பணி
2 minutes ago
அங்கன்வாடி கட்டடங்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
3 minutes ago
எல்லையம்மன் கோவிலில் ரூ.20 லட்சத்தில் நிழற்குடை
3 minutes ago
புதுப்பட்டினம்: கல்பாக்கம் அருகே, புதுப்பட்டினம் சாலையில் திரியும் மாடுகளால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணம் செய்து வருகின்றனர். கல்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டினம் ஊராட்சி முக்கிய வர்த்தக பகுதியாக உள்ளதால், சுற்றுப்பகுதி மக்கள் இங்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் அதிக அளவில் மாடுகள் கூடி சாலையில் ஓய்வெடுப்பதால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணிக்கும் நிலை உள்ளது. மேலும், இங்குள்ள பழைய கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட சாலைகளிலும், மாடுகள் திரிவது அதிகரித்துள்ளது. பகல் மட்டுமின்றி, இரவு நேரத்திலும் மாடுகள் சாலையில் திரிவதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. உணவு தேடி திரியும் போது, இவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, இரவு நேரத்தில் சாலையை ஆக்கிரமித்து படுத்து ஓய்வெடுப்பதால், வேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, புதுப்பட்டினம் பகுதி சாலைகளில் மாடுகள் திரிவதை தடுக்க, ஊராட்சி நிர்வாகம், பிற அரசுத் துறையினர் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
2 minutes ago
3 minutes ago
3 minutes ago