உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  புதுச்சேரி சாலை விரிவாக்க பணிகள் விபத்தை தடுக்க நடவடிக்கை அவசியம்

 புதுச்சேரி சாலை விரிவாக்க பணிகள் விபத்தை தடுக்க நடவடிக்கை அவசியம்

மாமல்லபுரம்: புதுச்சேரி சாலை விரிவாக்க பணிகள் நடக்கும் பகுதிகளில் எச்சரிக்கை பலகை, தடுப்புகள் அமைத்து, விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையை, நான்குவழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள், கடந்த மூன்றாண்டுகளாக நடைபெற்று வருகின்றன. பாலம் கட்டுமானம், இணைப்புச் சாலை உள்ளிட்ட பணிகளுக்காக, தேவையான இடங்களில் அணுகுசாலைகளும் அமைக்கப்பட்டன. மேலும், சாலைகள் அகலப்படுத்தும் பகுதிகளில், பள்ளம் தோண்டப்பட்டுள்ள நிலையில், அந்த இடங்கள் அபாய சரிவுடன் உள்ளன. எச்சரிக்கை பலகை, இரும்பு தடுப்பு, ஒளிரும் ஸ்டிக்கர் போன்ற எதுவும் வைக்கப்படவில்லை. இதனால், வாகனங்களால் மண் சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் இதுபோன்று விபத்துகள் ஏற்பட்டு, பல வாகனங்கள் சாலையோரம் கவிழ்ந்துள்ளன. இதை தவிர்க்க, சாலை அமைக்கும் ஒப்பந்த நிறுவனம், முறையான பாதுகாப்பு நடைமுறைகளை செயல்படுத்த வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ