உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கடலோர பாதுகாப்பு குறித்து ஆலோசனை

கடலோர பாதுகாப்பு குறித்து ஆலோசனை

மாமல்லபுரம்,:கடலோர எல்லை பாதுகாப்பு மேலாண்மை குறித்து, உள்துறை விவகாரங்கள் லோக்சபா நிலைக் குழுவினர், மாமல்லபுரத்தில் நேற்று ஆலோசனை நடத்தினர்.மாமல்லபுரத்திற்கு நேற்று முன்தினம் இரவு வந்த இக்குழுவினர், இங்குள்ள தனியார் கடற்கரை விடுதியில் தங்கினர். நேற்று காலை உள்துறை விவகாரங்கள் அமைச்சக அதிகாரிகள், கடலோர பாதுகாப்பு மற்றும் இந்திய கப்பல் படையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், கடற்கரை எல்லை பாதுகாப்பு மேலாண்மை நிர்வாகம், கடலோர கண்காணிப்பு மற்றும் செயல்பாடு, வருங்கால மேம்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர்.முன்னதாக, இக்குழுவினர் பல்லவர் கால சிற்பங்களை கண்டு ரசித்தனர். கூட்டத்தை தொடர்ந்து, நிலைக் குழுவினர் புதுச்சேரி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை