உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  அங்கன்வாடி ஊழியர்கள் செங்கையில் போராட்டம்

 அங்கன்வாடி ஊழியர்கள் செங்கையில் போராட்டம்

செங்கல்பட்டு: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட, அங்கன்வாடி ஊழியர்கள் 72 பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர். தமிழக அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம், செங்கல்பட்டு மாவட்டம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட தலைவர் மேனகா தலைமையில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் பகுதியில், நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில், தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதிப்படி, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக மாற்றி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 72 பேரை, செங்கல்பட்டு தாலுகா போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ