உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அகற்றப்பட்ட நிழற்குடைகளை மீண்டும் அமைக்க எதிர்பார்ப்பு

அகற்றப்பட்ட நிழற்குடைகளை மீண்டும் அமைக்க எதிர்பார்ப்பு

திருப்போரூர்:திருப்போரூர் - செங்கல்பட்டு சாலையில், மடையத்துார், செம்பாக்கம், கொட்டமேடு, வெங்கூர், கரும்பாக்கம், சிறுங்குன்றம், வளர்குன்றம், சென்னேரி, திருவடிசூலம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.கடந்த 2009ம் ஆண்டு, இச்சாலை இரு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டது.பின், திருப்போரூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளின் வருகை மற்றும் ஜி.எஸ்.டி., சாலைக்கு செல்லும் வாகனங்கள் அதிகரிப்பு காரணமாக, இச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற, நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது.இதையடுத்து, 21 கி.மீ., வரை, 13 கோடி ரூபாய் செலவில், மழை நீர் கட்டமைப்பு, சிறு பாலங்கள் விரிவுபடுத்துதல், மண்ணரிப்பு ஏற்படாமல் இருக்க கான்கிரீட் தடுப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுடன், நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.இந்த சாலை விரிவாக்கப் பணியின்போது, இடையூறாக இருந்த மரங்கள், ஆக்கிரமிப்பு கட்டடங்கள், கடைகள், பேருந்து நிழற்குடைகள் என, அனைத்தும் அகற்றப்பட்டன.தற்போது, சாலை அமைக்கும் பணிகள் முடிந்த நிலையில், அகற்றப்பட்ட பயணியர் நிழற்குடைகளை மீண்டும் அமைக்க, முழு நடவடிக்கை எடுக்கவில்லை. சில இடங்களில் மட்டும் நிழற்குடை அமைக்கப்பட்டது.இதனால், பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும் பயணியர், நிழற்குடை இல்லாததால் அவதிப்படுகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வயதானோர், மழை, வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.எனவே, அகற்றப்பட்ட நிழற்குடைகளை மீண்டும் அமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை