உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  ஆட்டோ திருடிய நபர் கைது

 ஆட்டோ திருடிய நபர் கைது

செங்கல்பட்டு: தாம்பரம் அடுத்த மேடவாக்கம், அரசங்கழனி பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா, 22. இவர் கடந்த 12ம் தேதி, தனக்கு சொந்தமான ஆட்டோவில், மனைவியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். சிகிச்சைக்குப் பின் வந்து பார்த்த போது, ஆட்டோவை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.இதுகுறித்து, செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், திருப்போரூர் -- கேளம்பாக்கம் சாலையில் நேற்று காலை, சூர்யாவின் ஆட்டோ செல்வதைக் கண்ட அவரது உறவினர்கள், ஆட்டோவை மடக்கி அந்த நபரை, திருப்போரூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், ஆட்டோவை திருடிய நபர் சென்னை தி.நகர் பகுதியைச் சேர்ந்த உதயகுமார்,50, என தெரிந்தது. இதையடுத்து திருப்போரூர் போலீசார், ஆட்டோ மற்றும் உதயகுமாரை, செங்கல்பட்டு நகர போலீசாரிடம் ஒப்படைத்தனர். உதயகுமாரை கைது செய்த போலீசார், விசாரணைக்குப் பின் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்