உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடுவாஞ்சேரி நகராட்சியில் விழிப்புணர்வு நாடகம்

கூடுவாஞ்சேரி நகராட்சியில் விழிப்புணர்வு நாடகம்

கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரி பேருந்து நிலைய வளாகத்தில், துாய்மை இந்தியா இயக்கத்தின் சார்பில், துாய்மை சேவை என்ற தலைப்பின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், நகராட்சி கமிஷனர் தாமோதரன், சுகாதார அலுவலர் நாகராஜன், சுகாதார ஆய்வாளர் காளிதாஸ் மற்றும் நகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சியில், காமாட்சி தியேட்டர்ஸ் கலைக்குழுவினர் நிகழ்த்திய விழிப்புணவு நாடகம் நடந்தது.அதில், பொது சுகாதாரம், மழைநீர் சேகரிப்பு, குடிநீர் பாதுகாப்பு, மட்கும் குப்பை, மட்காத குப்பை, டெங்கு காய்ச்சல், தனிநபர் கழிப்பறை போன்றவை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை