உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரூ.40.97 லட்சம் மதிப்பில் தார் சாலைக்கு பூமி பூஜை

ரூ.40.97 லட்சம் மதிப்பில் தார் சாலைக்கு பூமி பூஜை

திருப்போரூர் : திருப்போரூர் ஒன்றியம், படூர் ஊராட்சி, ஒன்றாவது வார்டு, முத்துமாரியம்மன் கோவில் தெருவில், சாலை சேதமடைந்திருந்தது. அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து, நிரந்தர வெள்ளத்தடுப்பு திட்டத்தின் கீழ், 40.97 லட்சம் மதிப்பில், 230 மீட்டர் நீளத்தில், புதிய தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில், திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் பங்கேற்று, பூமி பூஜைகள் செய்து பணிகளை துவக்கி வைத்தார். ஊராட்சி தலைவர் தாரா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ