உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க சென்று தகராறு மேலாளரை தாக்கிய பா.ஜ., நிர்வாகி கைது

ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க சென்று தகராறு மேலாளரை தாக்கிய பா.ஜ., நிர்வாகி கைது

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகரில் இந்தியன் வங்கி உள்ளது. இந்த வங்கியின் ஏ.டி.எம்., மையத்தில் உள்ள இயந்திரத்தை, வங்கி உதவி மேலாளர் பிரதீப் மேற்பார்வையில் பொறியாளர் 'சர்வீஸ்' செய்து கொண்டிருந்தார்.அதே பகுதியைச் சேர்ந்தவரும், பா.ஜ.., மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினருமான அபிலாஷ், 35, என்பவர், பணம் எடுக்க வந்தார்.அப்போது, ஏ.டி.எம்., மையம் வெளியே நின்ற வங்கி பெண் ஊழியர் ஒருவர், இயந்திரத்தில் சர்வீஸ் பணி நடப்பதால் காத்திருக்க வேண்டும் என அபிலாஷிடம் கூறினார்.அதை மீறி உள்ளே நுழைந்த அபிலாஷ், இயந்திரத்தில் ஏ.டி.எம்., கார்டை செலுத்த முயன்றார். அங்கு பணியில் இருந்த பொறியாளர் அவரை தடுத்தார். இப்போது பணம் எடுத்தால், இயந்திரத்தில் கோளாறு ஏற்படும் என கூறி உள்ளார்.அதையும் கண்டுகொள்ளாத அபிலாஷ், பணம் எடுக்க முயற்சித்தபோது, வங்கி உதவி மேலாளர் பிரதீப் அவரை தடுத்து நிறுத்தினார். பதிலுக்கு அபிலாஷ், அவரை தள்ளிவிட்டு சென்றார். இதனால, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அபிலாஷ், பிரதீப்பை அநாகரிகமாக பேசி, காலணியால் அடித்து தாக்கினார்.இதுகுறித்து பிரதீப் புகாரின்படி வழக்கு பதிந்த மணவாள நகர் போலீசார், அபிலாஷை கைது செய்தனர். திருவள்ளூர் ஜே.எம்., - 2 நீதிபதி பவித்ரா முன் நேற்று ஆஜர்படுத்தி, சொந்த ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார்.அபிலாஷின் தாய் ஜெயந்தி, வெங்கத்துார் ஊராட்சி ஐந்தாவது வார்டு கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கி கூரை விழுந்து மூவர் காயம்

கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு காவல் நிலையம் அருகே இந்தியன் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில், மப்பேடு மற்றும் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பகுதிவாசிகள், வாடிக்கையாளர்களாக உள்ளனர். நேற்று காலை 11:30 மணிக்கு, வங்கியின் கூரையில் இருந்து கான்கிரீட் பூச்சு திடீரனெ விழுந்தது. இதில், வங்கிக்கு நகை கடன் மற்றும் முதியோர் உதவித்தொகை பெற வந்த காஞ்சிபுரம் மாவட்டம், சின்னவளர்புரத்தைச் சேர்ந்த ஜோஸ்பின், 64, மப்பேடு மணி, 60, வயலுார் பார்வதி, 65, ஆகிய மூவரும் காயமடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு, மப்பேடில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை