உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புளு ஸ்கை சூப்பர் லீக் கிரிக்கெட்: யங் சிசி அணி திரில் வெற்றி

புளு ஸ்கை சூப்பர் லீக் கிரிக்கெட்: யங் சிசி அணி திரில் வெற்றி

சென்னை: சென்னையில் இயங்கி வரும் புளு ஸ்கை கிரிக்கெட் அகாடமி சார்பில், 20 ஓவர் அடிப்படையிலான கிரிக்கெட் போட்டிகள், நகரின் பல இடங்களில் நடந்து வருகின்றன.இவற்றில் பங்கேற்றுள்ள ஒன்பது அணிகளும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதிக வெற்றியை பெறும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.அதன்படி, சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளி மைதானத்தில் நடந்த 'சூப்பர் லீக்' போட்டியில், 'வோல்வரின்ஸ்' அணியை எதிர்த்து, 'யங் சிசி' அணி களமிறங்கியது.டாஸ் வென்ற வோல்வரின்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய யங் சிசி அணி, 18.3 ஓவரில், 119 ரன்களில் ஆட்டமிழந்தது. சசிதரன் 28 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.எளிய இலக்குடன் அடுத்து களமிறங்கிய வோல்வரின்ஸ் அணி வீரர்களுக்கு, யங் சிசி அணியின் பந்து வீச்சாளர்களும், பீல்டர்களும் கடும் நெருக்கடி தந்தனர்.வெற்றிக்கு அருகே சென்ற வோல்வரின்ஸ் அணி, 19.4 ஓவரில் 117 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால், 2 ரன் வித்தியாசத்தில் யங் சிசி அணி திரில் வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை