| ADDED : ஜூலை 11, 2024 12:49 AM
எலும்புக் கூடாக மாறிய மின்கம்பம் புதிதாக அமைக்க எதிர்பார்ப்பு
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், திருமணி ஊராட்சியில், குளக்கரை அருகில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள்உள்ளன.இந்த குடியிருப்புகளுக்கு மின் வாரியம் சார்பில், மின் கம்பங்கள் அமைக்கபட்டு மின் வினியோகம் செய்யப்படுகிறது.இதில், குளக்கரை அருகில் ஜானகிபுரம் செல்லும் சாலையோரம் உள்ள மின் கம்பம்,மிகவும் சேதமடைந்து உருக்குலைந்துகாணப்படுகிறது. எனவே, இந்த மின் கம்பத்தை அகற்றி, புதிதாக அமைக்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ↔- எஸ்.பூபதி, செங்கல்பட்டு. சாலை நடுவே 'மெகா' பள்ளம் வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
பவுஞ்சூர் அருகே நெல்வாய்பாளையம் கிராமத்தில் இருந்து அணைக்கட்டு செல்லும் சாலை உள்ளது. இச்சாலை வழியாக தினமும் இருசக்கர வாகனம், கார், பேருந்து என, நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.மேலும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டர்கள், நெல் அறுவடை இயந்திரங்கள் போன்ற கனரக வாகனங்களும் செல்கின்றன.இந்த சாலையின் நடுவே ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளதால், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.சில நேரங்களில் சிறுசிறு விபத்துகளில் சிக்கிவருகின்றனர். எனவே, சம்பந்தபட்ட துறை அதிகாரிகள், சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.